மகனின் கியூட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்…. அப்படியே அம்மா போலவே இருக்காரே….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகனின் கியூட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்…. அப்படியே அம்மா போலவே இருக்காரே….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யாவுடன் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு இந்தியன் 2 திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் காஜல் அகர்வால். இப்படத்தின் சூட்டிங் சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

Advertisement

இதனிடையே தனது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வரும் காஜல் அகர்வால், அவ்வகையில் நேற்று காஜல் தனது குழந்தைக்கு 9 மாதங்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் 3/4 பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in