LATEST NEWS
பிரபல நடிகரிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி….. என்ன காரணம் தெரியுமா?…. அவரே கூறிய உண்மை….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீப காலமாக வில்லன் மற்றும் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்து வரும் நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதி, ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்தது குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நடிகர் ஷாருக்கான் ஒரு இனிமையான மனிதர். முதல் நாள் படத்தின் ஷூட்டிங் அவருடன் சேர்ந்து நடிப்பதை நினைத்து நான் மிகவும் பயந்தேன். ஆனால் அவர் என்னை இயல்பாக தான் நடத்தினார். அவரிடம் பல விஷயங்கள் பற்றி நான் பேசினேன்.
பாலிவுட் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக அவர் காட்டிக் கொள்ளவில்லை. ஒரு சில சமயங்களில் நான் அவரிடம் அதிகமாக பேசி அவரை தொந்தரவு செய்துள்ளேன். இதனை எண்ணி அவரிடம் மன்னிப்பு கேட்டேன். இருந்தாலும் அவர் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேறு ஏதேனும் கேள்வி இருந்தால் கேளுங்கள் என்று என்னிடம் இயல்பாக பேசினார் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
