LATEST NEWS
அம்மாடியோ இத்தனை கோடியா?…. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க…. கமல்ஹாசனுக்கு சம்பளத்தை வாரி வழங்கிய விஜய் டிவி….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 100 நாட்களைக் கடந்த இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் பைனல் என்பதால் டைட்டில் ஜெயிக்கப் போவது யார் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் போட்டியாளர்களுக்கு பணப்பெட்டியை எடுத்துச் செல்லும் வாய்ப்பு பிக் பாஸ் வீட்டில் வழங்கப்பட்டு வருகிறது.
இறுதியில் அசீம் அல்லது விக்ரமன் இவர்களில் ஒருவர்தான் வெற்றியாளர் என்று ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர். இருந்தாலும் பிக் பாஸ் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் இந்த பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியை கிட்டத்தட்ட 15 வாரங்கள் தொகுத்து வழங்கியுள்ளார். இதற்காக கமல்ஹாசனுக்கு 75 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு எபிசோடிற்கு அவர் 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
