LATEST NEWS
குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் அறிவித்த நடிகர் ஆர்.கே சுரேஷ்…. ஆனால் இப்படி ஒரு பிரச்சனையா?…. வருந்தும் ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் ஆர் கே சுரேஷ். இவர் பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படம் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிரபல தயாரிப்பாளரான இவர் தற்போது வில்லனாக நடிப்பது மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் ஆர் கே சுரேஷ் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தற்போது அறிவித்துள்ளார். இது பற்றிய அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், குழந்தைக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை இருப்பதாகவும், அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆர் கே சுரேஷ்க்கு ஏற்கனவே பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/studio9_suresh/status/1616495573586087940
