LATEST NEWS
தமிழ் சினிமாவில் கலக்கும் காமெடி நடிகர் பிளாக் பாண்டியின்…. அழகிய திருமண புகைப்படங்கள் இதோ…..!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் தான் பாண்டி.
தமிழ் சினிமாவில் காமெடி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் இவர்.
இவரை அனைவரும் செல்லமாக பிளாக் பாண்டி என்று தான் அழைப்பார்கள்.
இவர் தன்னுடைய சிறு வயது முதலே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
தமிழில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான விவேக் மற்றும் வடிவேலு போன்றவர்கள் நடித்த கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற திரைப்படத்தில் வடிவேலுவின் மகனாக நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து கில்லி, ஆட்டோகிராப் மற்றும் சாட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
விஜய் டிவி ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.
இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு தனி ஒரு அடையாளத்தை கொடுத்த திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடி தெரு திரைப்படம் தான்.

#image_title
இப்படி தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பாண்டி ஏழு வருடமாக பத்மினி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

#image_title
அவர் எம்பிஏ பட்டதாரியும் கூட. அதன் பிறகு பல எதிர்ப்புகளை மீறி கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஐஸ்வர்யா மாலில் பத்மினியை பாண்டி திருமணம் செய்து கொண்டார்.

#image_title
தன்னுடைய இந்த வெற்றிக்கு தனது மனைவிதான் காரணம் எனவும் பலமுறை பிளாக் பாண்டி கூறியுள்ளார். தற்போது அவரின் அழகிய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
