திரையுலகில் ஒன்றாக நடித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் யார் யார் தெரியுமா?…. இதோ ஒரு சிறப்பு தொகுப்பு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திரையுலகில் ஒன்றாக நடித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் யார் யார் தெரியுமா?…. இதோ ஒரு சிறப்பு தொகுப்பு….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் ஒன்றாக நடித்து திருமணம் செய்து கொண்ட திரை பிரபலங்கள் பலரும் உள்ளனர். அப்படி சினிமாவில் ஒன்றாக நடித்த திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எம்ஜிஆர் – ஜானகி:

Advertisement

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாபெரும் மனிதராக வாழ்ந்தவர் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். இவரின் புகழ் இன்றளவும் தமிழ் மக்களால் பாடிக் கொண்டிருக்கிறது. இவரும் ஜானகியும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிர் காதலித்தவர். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் நடிகை சாவித்ரி:

Advertisement

தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி பாதையை வகுத்து பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் ஜெமினி கணேசன். இவர் தன்னுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்த நடிகை சாவித்திரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் அலமேலு,புஷ்பவல்லி மற்றும் சாவித்திரி ஆகியோருடன் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இவருக்கு ஏழு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா:

Advertisement

தமிழ் சினிமாவில் என்றும் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் தன்னுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்த நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மற்றொரு மனைவியும் உள்ள நிலையில் ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

நடிகர் ராமராஜன் மற்றும் நளினி:

Advertisement

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக திகழ்ந்த ராமராஜன் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் தற்போது விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் சாரிகா:

Advertisement

தமிழ் சினிமாவில் இன்றும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் கமல்ஹாசன் நடிகை சரிகாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு விவாகரத்து செய்து பிரிந்த இவர்கள் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி:

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் அமர்களம் திரைப்படத்தில் ஷாலினியுடன் இணைந்து நடித்தார். படத்தின் படப்பிடிப்பிலேயே தனது காதலை ஷாலினியிடம் கூறியுள்ளார். அதன் பிறகு இருவரும் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சூர்யா – ஜோதிகா:

Advertisement

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து ஒன்றாக பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக காக்க காக்க மற்றும் ஜில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன. இவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

சினேகா – பிரசன்னா:

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் சினேகா 2009 ஆம் ஆண்டு வெளியான அச்சம் உண்டு அச்சம் உண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு காதலித்து 2012 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

அட்லி பிரியா:

Advertisement

பத்து வருடமாக நண்பர்களாக பழகி வந்த இவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்த பிரியா இணையத்தில் ஆக்டிவாக இருந்து தொடர்ந்து பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.

பாக்கியராஜ் – பூர்ணிமா:

Advertisement

டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் இயக்குனர் பாக்யராஜுக்கு அறிமுகமானவர்தான் பூர்ணிமா. சில வருடங்கள் நண்பர்களாக பழகி வந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

சுந்தர் சி – குஷ்பூ:

Advertisement

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறைமாமன் திரைப்படத்தில் குஷ்பூ நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் 2000 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன.

ராதிகா – சரத்குமார்:

Advertisement

கிழக்கே போகும் ரயில் படம் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ராதிகா. எண்பதுகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக திகழ்ந்த இவருக்கும் சரத்குமாருக்கும் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராதிகா சரத்குமார் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நஸ்ரியா – பகத் பாஸில்:

Advertisement

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானவர்தான் நஸ்ரியா. இவரை அனைவரும் செல்லமாக எக்ஸ்பிரஷன் குயின் என்றுதான் அன்போடு அழைப்பார்கள். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழும் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆர்யா – சாயிஷா:

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஆர்யா 2019 ஆம் ஆண்டு கஜினிகாந்த் திரைப்படத்தில் சாயிஷா உடன் இணைந்து நடித்தார். பிறகு இருவரும் காதலின் விழுந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒன்றாக இணைந்து தேடி திரைப்படத்திலும் நடித்திருந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

அமலா – நாகார்ஜுனா:

Advertisement

சிவா,பிரேமயுத்தம் மற்றும் நிர்ணயம் ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அமலா நாகார்ஜுனாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in