மகளின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகளின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் வெங்கட் ரங்கநாதன்.

இவர் இந்த சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement

இவர் 1989 ஆம் ஆண்டு மே மாதம் பழனியில் பிறந்தவர். இவர் பிறந்து வளர்ந்தது அனைத்தும் பழனியில் தான்.

இவர் முதன்முதலாக தொலைக்காட்சி தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானார்.

Advertisement

அதன் பிறகு தான் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, மெல்ல திறந்தது கதவு மற்றும் நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

Advertisement

அதேசமயம் திருமணம் போன்ற சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். பழனியில் உள்ள முனிசிபல் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்த இவர் புதுக்கோட்டையில் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை தேடித் தந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்.

Advertisement

இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து விட்டது. இவர் அஜந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரின் மனைவி போட்டோகிராபராக பணியாற்றி வருகின்றார். இவர்கள் இருவரும் பாலிடெக்னிக் படிப்பை ஒன்றாக தான் படித்தனர்.

Advertisement

அப்போது ஏற்பட்ட நட்பு பிறகு காதலாக மாறிய நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்களுக்கு மகிழினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தனது மகளின் பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக வெங்கட் கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in