LATEST NEWS
உங்களுக்கு வயசே ஆகாதா?…. 56 வயதிலும் டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நதியா…. புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு முன் அறிமுகமானவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களும் உள்ளனர்.
ஒரு காலகட்டத்தில் நதியா கொண்டை, நதியா வளையல் மற்றும் நதியா கம்மல் என அவர் பெயரில் வியாபாரமும் செழிப்பாக இருந்தது. பொதுவாக நடிகைகள் சிலர் இரண்டாவது திரைப்படத்தில் கவர்ச்சியில் குதிப்பார்கள்.
ஆனால் தனது இறுதி படம் வரை கவர்ச்சி காட்டாமல் கண்ணியமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது நதியா மட்டும் தான். இவருக்கு தற்போது 56 வயதாகிறது.
ஆனாலும் தனது இளமை குறையாமல் இன்னும் அப்போது இருந்தது போல இளமையாகவே இருக்கிறார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நதியா தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் நிலையில் 56 வயதாகும் நதியா அண்மையில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் சூரிய ஒளியில் நின்றபடி எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.
அதனைப் பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு வயதை ஆகாதா எப்படி இவ்வளவு இளமையா இருக்கீங்க என்று கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.