LATEST NEWS
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவுக்கு குழந்தை பிறந்தாச்சு…. புகைப்படத்தை வெளியிட்டு அவரே சொன்ன குட் நியூஸ்….!!!!
சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமானவர்தான் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து கேளடி கண்மணி சீரியல் கதாநாயகனாக நடித்த அர்ணவைஇரண்டு வருடத்திற்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பு தனியாக ஒரே வீட்டில் இருவரும் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பின் இருந்ததாகவும் கூறப்பட்டது.
அதன் பிறகு ஒன்றாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. திவ்யா கர்ப்பமாக இருக்கும் தகவலை கூறிய சில வாரங்களில் அர்ணவ் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாக ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
இந்த பிரச்சனை போலீஸ் விசாரணை வரை சென்றது. அதன் பிறகு கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு சீரியல் பிரபலங்கள் ஆறுதலாக இருந்தே வளகாப்பு நடத்தினர். இந்நிலையில் தற்போது தனக்கு குழந்தை பிறந்த இணையத்தில் பகிர்ந்துள்ளார். தனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
