LATEST NEWS
காதல் திருமணம் முடித்த…. சீரியல் பிரபலம் மகாலட்சுமி -ரவீந்தர் தம்பதியின் அழகிய திருமண புகைப்படங்கள்….!!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார்.
மறுபக்கம் மகாலட்சுமி சீரியலில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார். அது மட்டுமல்லாமல் பல விளம்பரங்களையும் செய்து அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
திருமணம் முடிந்த கையோடு இவர்களின் திருமணம் விமர்சிக்கப்பட்டாலும் தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
அதேசமயம் விடுமுறை நாட்களில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதி தங்களின் க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
ஆனால் சமீபத்தில் ரவிந்தர் தனியாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் ஒரு சோகமான பதிவை பகிர்ந்து இருந்த நிலையில் அதனை பார்த்த பலரும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி பிரிந்து விட்டதாக கூறி பல பதிவுகளை பகிர்ந்தனர்.
ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் மகாலட்சுமி இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதியின் க்யூட்டான திருமண புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகிறது.
