CINEMA
4-ஆவது கணவரா இது..? திடீர் குண்டை தூக்கிப்போட்ட பிரபல ஹாலிவுட் ஜோடி…!!
பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியுமான ஜெனிபர் லோபஸும், பிரபல நடிகர் பென் அப்லெக் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்தார்கள். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். நட்சத்திர ஜோடியாக வலம் வந்த நிலையில் தற்போது விவகாரத்துக்கு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தாங்கள் கடந்த 26 ஆம் தேதி முதலே பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ள தாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஜெனிஃபர் லோபஸ் விவகாரத்து மனு தாக்கல் செய்துள்ளார். ஜெனிஃபர் லோபஸ்க்கு பென் அப்லெக் நான்காவது கணவர். இதற்கு முன்பாக இவர் மூன்று திருமணம் செய்துள்ளார்.