CINEMA
என்னாச்சு..! வாடிய முகத்தோடு வந்த இயக்குநர் பாலா…. மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தம்…. வைரலாகும் வீடியோ…!!!
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் மாரி செல்வராஜின் சிறுவயதில் நடந்த விஷயங்களை சொல்லியிருப்பார்.
இந்த படத்தை மாரி செல்வராஜின் மனைவி திவ்யா தயாரிக்கிறார். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது . சமீபத்தில் தான் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் வாழைப் படம் குறித்து பாராட்டுக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இயக்குனர் பாலா “வாழை” படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் பொழுது மிகுந்த கனத்த இதயத்தோடு மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து அவர் முத்தம் இட்டுள்ளார். இந்த வீடியோவை இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி பாலா சார் என்று பதிவிட்டுள்ளார்.
முத்தம் ❤️
—
நன்றி பாலா சார்#vaazhai
Tomorrow pic.twitter.com/ctqYbxBQ8w— Mari Selvaraj (@mari_selvaraj) August 22, 2024