CINEMA
ரொம்ப சந்தோஷமா இருக்கு…. தவெக விழாவிற்கு வந்த அந்த 2 பேர்…. மேடையில் நன்றி சொன்ன விஜய்…!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று அக்கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்து கொடியை ஏற்றினார் . அந்த கொடியில் வாகை மலர் நடுவிலும் இரண்டு பக்கங்களிலும் யானை இருப்பது போல இருக்கிறது. மேலும் இந்த கட்சிக் கொடி அறிமுக விழாவில் கட்சிப்பாடலும் ஒளிபரப்பப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய, விஜய் புயலுக்குப் பிறகு அமைதி ஆர்ப்பாட்டம் ஆர்ப்பரிப்பு எல்லாமே இருக்கும். அதேபோல நம்முடைய கொடிக்குப் பின்னால் ஒரு சுவாரசியமான வரலாற்று குறிப்பு இருக்கிறது.
அது என்னவென்று நீங்கள் எல்லோரும் எதிர்பார்க்கும் அந்த நாள் அன்று விளக்கமாக சொல்வேன். அதுவரை நாம் இதை சந்தோஷமாக கொண்டாடுவோம். வெறும் இது கட்சிக்கான கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால வெற்றிக்கான ஒரு கோடி என்று கூறினார். கடைசியாக மேடையை விட்டு செல்லும் பொழுது, முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். இந்த விழாவிற்கு என்னுடைய அப்பா, அம்மா வந்தது எனக்கு மிகவும் சந்தோஷம் என்று கூறிவிட்டு அவர்களுக்கு நன்றியும் சொல்லியுள்ளார் விஜய்.