LATEST NEWS
“இவள அடிங்கடா..!” நடுரோட்டில் பெண் டாக்டரைச் சூழ்ந்த 30 ஆண்கள் கும்பல்! ஆடைகளை இழுத்து அராஜகம் செய்த கொடூரம்.. பதறவைக்கு வீடியோ..!!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஏற்பட்ட சிறிய கார் விபத்தைத் தொடர்ந்து, சுமார் 20 முதல் 30 பேர் கொண்ட ஆண்கள் கும்பல் ஒன்று பெண் மனநல மருத்துவரைச் சூழ்ந்துகொண்டு, ஆடைகளை இழுத்துத் தாக்க முயன்ற கொடூரச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கராச்சியின் குலிஸ்தான்-ஏ-ஜோஹர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநல மருத்துவ ஆலோசகராகப் பணிபுரிந்து வரும் ஆயிஷா சாகித் என்பவரின் கார், எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது லேசாக மோதியுள்ளது. இதனால் விபத்தில் யாருக்காவது காயம் ஏற்பட்டுள்ளதா என்று பார்ப்பதற்காக ஆயிஷா காரை விட்டு கீழே இறங்கியுள்ளார். அப்போது அங்கே கூடிய ஆண்கள் கும்பல், “பெண்களுக்குக் கார் ஓட்டத் தெரியவில்லை என்றால் ஏன் சாலைக்கு வருகிறார்கள்?” என்று இகழ்ந்து பேசி, அவரது கார் சாவி மற்றும் அலைபேசியைப் பிடுங்கிக் கொண்டு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
அந்தக் கும்பல் ஆயிஷாவின் ஆடைகளைத் தொட்டு இழுத்து, “இவளை அடிங்கள், இவளுக்கு இதுதான் தேவை” என்று ஆக்ரோஷமாகக் கூச்சலிட்டபடி அவரை வன்முறையாகத் தாக்க முயன்றுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஆயிஷா சாகித் சிறிதும் பயப்படாமல் அந்தப் பெருங்கூட்டத்தை மிகவும் தைரியமாக எதிர்த்து நின்று, பெண் காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு அழைக்குமாறு சவால் விடுத்துள்ளார். விபத்தின் போது ஆயிஷா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாகக் பரவிய வதந்திகளைப் பாகிஸ்தான் காவல்துறையினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதற்கிடையே, “தனியாக இருக்கும் பெண்ணைப் பார்த்து ஆக்ரோஷமாக அச்சுறுத்திய கூட்டத்திற்கு எதிராகத் தைரியமாக நின்ற என் மனைவியைக் குறித்துப் பெருமைப்படுகிறேன்” என்று அவரது கணவர் சைன் காஸ்மானி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பொதுமக்களிடையே கடும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
