LATEST NEWS
மன உளைச்சலில் …கணவர் போடும் திட்டங்கள்… மாட்டிக்கொள்ளும் பாக்கியா… ஜெனிக்கு பெண் குழந்தையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பு மிகவும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலானது ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த சீரியல் ஆனது கணவருக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு தன் வாழ்க்கையில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சனை, சந்தோஷங்கள் ,சவால்கள் உள்ளிட்டவை கதைக்களமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பப்படுகிறது.
பாக்கியாவின் முன்னேற்றத்தை சகித்துக் கொள்ள முடியாத கோபி மற்றும் ராதிகா பல திட்டங்களை போட்டு அதை செயல்படுத்தி வருகின்றனர். தற்போதுபாக்கியாவின் கேன்டீன் கான்டிராக்டை அவரிடமிருந்து பறிக்கிறார் ராதிகா. இதனால் பாக்கியா தன்னை சுருக்கி கொள்கிறார். இதற்கு ஏற்ப அவரது மாமியார் ஈஸ்வரி பாக்யாவை திட்டுகிறார். இது எல்லாம் அறிந்த பாக்கியாவின் நண்பர் பழனிச்சாமி ,நீங்கள் சூரியன் போன்றவர் தன்னை சூழ்ந்துள்ள மேகக் கூட்டங்களை குறித்து நீங்கள் கவலை கொள்ள கூடாது என்று சமாதானம் கூறி வருகிறார்.
செழியனின் மனைவி ஜெனிக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.ஜெனிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. இதனால் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றனர். மருத்துவமனைக்கு வரும் கோபி, தனக்கு பேத்தி பிறந்ததை கேள்வியுற்று குதூகலத்துடன் செழியனை தூக்கி சுற்றுகிறார்.கோபி மனைவி ராதிகாவிற்கு ஃபோன் செய்து செழியனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறுகிறார். அதன் பிறகு ராதிகா அம்மா உடனடியாக கோபியை வீட்டிற்கு அழைத்து வருமாறு மகளிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.