பகீர் திருப்பம்..! காணாமல் போன 7 வயது சிறுமி.. மாற்றி மாற்றி பேசும் தாய்.. சிபிசிஐடியின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர் திருப்பம்..! காணாமல் போன 7 வயது சிறுமி.. மாற்றி மாற்றி பேசும் தாய்.. சிபிசிஐடியின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் சத்தியமங்கலம் காவல் நிலைய போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும், சிறுமி குறித்து எவ்வித துப்பும் கிடைக்காததால், இவ்வழக்கு கடந்த 21ஆம் தேதி சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

தற்போது சிபிசிஐடி எஸ்பி ஜவஹர் தலைமையிலான அதிகாரிகள் சிறுமியின் வீட்டிலும், அக்கம்பக்கத்தினரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது சிறுமியின் தாயார் பவானி வாய்மொழியாகக் கூறிய தகவல்களுக்கும், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான புகாருக்கும் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதால் உண்மையை மறைப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தாயாரிடம் தொடர்ந்து மூன்று நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர் முழுமையான தகவல்களை அளிக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement

போலீசார் அப்பகுதியில் உள்ள கிணறுகள், கரும்புத் தோட்டங்கள் மற்றும் குப்பைக் கூலங்கள் என பல இடங்களில் தேடியும் சிறுமி குறித்த எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும், சிறுமி உயிருடன் இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநபர்களால் சிறுமி கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கிராம மக்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், சிறுமி ஹேமலதாவுக்கு என்ன ஆனது என்ற உண்மை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in