அடக்கொடுமையே.! பள்ளத்தில் விழுந்த ஆட்டோ… தலையில் விழுந்த ஒரே அடி.. கண் முன்னே பேசும் திறனை இழந்த கணவரைக் கண்டு தவித்த மனைவி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கொடுமையே.! பள்ளத்தில் விழுந்த ஆட்டோ… தலையில் விழுந்த ஒரே அடி.. கண் முன்னே பேசும் திறனை இழந்த கணவரைக் கண்டு தவித்த மனைவி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில், மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்த நபர் ஒருவர் தனது குரலை இழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. லக்னோவில் உள்ள கோமதி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெள்ளநீர் வடியாமல் தேங்கி நின்றுள்ளது. இந்தச் சூழ்நிலையில், ராஜ்குமார் என்ற நபர் தனது மனைவியுடன் மாலையில் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் வெளியே சென்று கொண்டிருந்தபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

இவர்களது ஆட்டோ ரிக்ஷா லக்னோவின் புகழ்பெற்ற ஃபீனிக்ஸ் பலாசியோஸ் மாலின் அருகே சென்றபோது, சாலையில் வெள்ள நீரில் மூழ்கியிருந்த ஒரு பெரிய பள்ளத்திற்குள் திடீரென இறங்கியுள்ளது. ஆட்டோ எதிர்பாராத விதமாகக் கடுமையான அதிர்வுடன் பள்ளத்தில் விழுந்ததால், உள்ளே அமர்ந்திருந்த ராஜ்குமார் பலமாகத் தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது தலை ஆட்டோவின் கூரையில் இருந்த இரும்பு கம்பியில் பலமாக மோதியதில், அவர் அந்த இடத்திலேயே சிறிது நேரம் மயக்கமடைந்தார்.

Advertisement

சிறிது நேரத்திற்குப் பிறகு ராஜ்குமாருக்கு மயக்கம் தெளிந்து சுயநினைவு திரும்பியபோது, அவரால் பேச முடியாமல் போனதைக் கண்டு அவரது மனைவி பெரும் அதிர்ச்சியும் பயமும் அடைந்துள்ளார். பலத்த அடியின் காரணமாக அவருக்கு என்ன நடந்தது என்றே புரியாமல் அவரது மனைவி தவித்துள்ளார். சாலையில் தேங்கிய வெள்ளநீரால் ஏற்பட்ட இந்த விபத்தில், ராஜ்குமார் தனது பேசும் திறனை முற்றிலும் இழந்துள்ளதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் லக்னோ பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in