LATEST NEWS
பிரம்மாண்ட பைக்கர் சிலை முன்பு நடிகர் அஜித்… ஷாலினி வெளியிட்ட அசத்தலான புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அஜித். இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல் மற்றும் பைக் ரேஸ் சொல்லிட்டா பல விளையாட்டு தொடர்பான செயல்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.அடிக்கடி தனது பைக்கில் சுற்றுலா என்ற பெயரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வளம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் கூட நேபாளம் நாட்டிற்கு உலக டூர் சுற்றுலா சென்று இருந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார். மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்க உள்ள நிலையில் அனிருத் இசை அமைக்கிறார்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.இதனிடையே சமீபத்தில் அஜித் சென்னை திரும்பி இருந்த நிலையில் விரைவில் விடா முயற்சி படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டது. தற்போது ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக நடிகர் அஜித் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் நார்வே ஆகிய நாடுகளில் பைக் ட்ரிப் சென்றுள்ளார்.
அது தொடர்பான புகைப்படங்களை அஜித் மனைவியை ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு வருகிறார். அதன்படி சமீபத்தில் நார்வே நாட்டுக்குச் சென்ற அஜித் அங்கு பிரம்மாண்டமான ஒரு பைக்கர் சிலைக்கு முன்பு தனது குழுவினர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.