நடிகர் பகத் பாசில் தந்தை பிரபல இயக்குனரா?.. தமிழில் இத்தனை படங்களை இயக்கியுள்ளாரா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் பகத் பாசில் தந்தை பிரபல இயக்குனரா?.. தமிழில் இத்தனை படங்களை இயக்கியுள்ளாரா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் வில்லன் மற்றும் ஹீரோவாக நடித்த கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் பகத் பாஸில். இவர் இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த மிரட்டி இருந்தார். அந்தத் திரைப்படம் வெற்றி அடைந்ததற்கு முக்கிய காரணமே இவரின் வில்லத்தனமான நடிப்பு என்று கூறலாம். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோவாக இவர் நடித்துள்ளார்.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது ட்ரெண்டிங் ஸ்டார் ஆக இருக்கும் இவர் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இவரின் தந்தை ஒரு தரமான இயக்குனர் என்பது பலரும் அறியாத ஒன்றுதான். தமிழில் இவர் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதாவது இயக்குனர் பாசில் முதல் முறையாக தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தை இயக்கினார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து சத்யராஜ் நடித்த பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் வெற்றியை தொடர்ந்து வருஷம் 16, அரங்கேற்ற வேலை, கற்பூர முல்லை, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். தமிழில் குறைந்த அளவிலான திரைப்படங்களை இயக்கினாலும் அவை அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தது.

தமிழில் இவர் இறுதியாக ஸ்ரீகாந்த் நடித்த ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதன் பிறகு இவர் தமிழில் எந்த ஒரு திரைப்படமும் இயக்கவில்லை. தற்போது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in