மனைவியுடன் சபரிமலை சென்று… சாமி தரிசனம் செய்த நடிகர் ஜெயராம்…. வெளியான புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மனைவியுடன் சபரிமலை சென்று… சாமி தரிசனம் செய்த நடிகர் ஜெயராம்…. வெளியான புகைப்படங்கள்….!!!

Published

on

மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயராம். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவர் தமிழில் முறைமாமன், கோகுலம், ஏகன்,துப்பாக்கி மற்றும் பஞ்சதந்திரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். இவருக்கு தமிழ் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

இவர் தற்போதும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  ஜெயராமின் மனைவி மலையாள திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதே சமயம் அவர் தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்ததை அனைவரும் அறிந்தது தான்.

Advertisement

இவர்களைத் தொடர்ந்து ஜெயராமின் மகனும் மலையாள சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ஓரளவு வெற்றியை தந்தாலும் தமிழ் திரைப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் ஜெயராம்  கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடித்திருந்தார்.

Advertisement

தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் ஆழ்வார் கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்துள்ளார்.

இந்த கதாபாத்திரம் நந்தினியின் சகோதரர் கதாபாத்திரமாகும். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் பாகத்திலும் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படம் வெற்றி பெறவும் சித்திரை மாதத்தை முன்னிட்டு நடிகர் ஜெயராம் தனது மனைவி பார்வதியுடன் சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

இவருடன் நடிகர் ஜெயம் ரவி, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் உடன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அது தொடர்பான புகைப்படங்களை ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in