LATEST NEWS
50 வயதில் அப்பாவான பிரபுதேவா… மனைவி, மகளுடன் திருப்பதி சென்ற அழகிய புகைப்படங்கள்…!!

தென்னிந்திய சினிமா திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் தான் பிரபுதேவா. இவர் நடிகர் மட்டுமல்லாமல் நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார்.
இவரின் நடனத்திற்கு ஒரு ரசிகர் பட்டாளமும் மற்றொரு பக்கம் இவரின் நடிப்பிற்கு ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது. அந்த அளவிற்கு நடிப்பின் திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
இப்படி பல்வேறு புகழுக்குரிய பிரபுதேவா கடந்த 1995 ஆம் ஆண்டு ராம் லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள்பிறந்தனர். அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகளால் தனது மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்தார்.
அப்போதிலிருந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா கடந்த 2020 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்ற ஹிமானி என்ற பெண்ணை திருமணம் திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து இவர்களுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. 50 வயதில் பெண் குழந்தையை பெற்றது சந்தோஷம் என்று பிரபுதேவா அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய அப்பா, மனைவி மற்றும் மகள் என குடும்பத்துடன் பிரபுதேவா திருப்பதிக்கு சென்றுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.