LATEST NEWS
அமிதாபச்சன், பகத் பாசிலை அடுத்து வேட்டையன் படத்தில் இணைந்த பாகுபலி நடிகர்.. லிஸ்ட் பெருசா போகுதே.. அப்போ படம் பான் இந்தியா அளவில் ஹிட் தான்..!!

டி.ஜே ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதால் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த படத்தில் அமிதாபச்சன், பகத் பாஸில், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.
படத்தின் ஷூட்டிங் தூத்துக்குடி மற்றும் சென்னையில் நடந்து முடிந்தது. பின்னர் ஒரு சில காரணங்களுக்காக படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பாகுபலி பட வில்லன் நடிகர் ராணா டகுபதி வேட்டையன் பட ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு முதல் நாள் ஷூட்டிங்கை உறுதி செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.