LATEST NEWS
கோவில் கும்பாபிஷேக விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் சரத்குமார்-ராதிகா தம்பதியினர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ஏற்கனவே ராதிகா பிரதாப் போத்தன், ரிச்சர்ட் ஹார்டி உள்ளிட்டோரை திருமணம் செய்தார்.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆன நிலையில் கடைசியாக 2001-ஆம் ஆண்டு சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சரத்குமாருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனது.
சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் வரலட்சுமி, பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இதில் வரலட்சுமி சினிமாவில் நடித்த வருகிறார்.
சமீபத்தில் தான் சரத்குமார் ராதிகா தம்பதியினர் தங்களது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிராவயல் கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் மற்றும் தளக்காவூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் ஆகியவற்றில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற்றது.
இதில் சரத்குமார் ராதிகா மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்களை சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.