VIDEOS
தம்பி ராமய்யா முன்பே மகனின் திருமணத்தை போட்டுடைத்த நடிகர் செந்தில்.. பொண்ணு யாருன்னு கன்ஃபார்ம் ஆச்சு… வைரலாகும் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை ரசிகர்கள் மத்தியில் ஆக்சன் கிங் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அர்ஜுன். இவர் நிவேதிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஐஸ்வர்யா விஷால் நடித்த பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவான சொல்லி விடவா என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக ஐஸ்வர்யா நடித்த நிலையில் தற்போது தனது தந்தை அர்ஜுன இயக்கத்தில் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா அர்ஜூன் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பதியை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆதங்கப்பட்டது மகாஜனங்களே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த உமாபதி, மணியார் குடும்பம், திருமணம் மற்றும் தண்ணி வண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தம்பி ராமையா சமுத்திரகனி நடிக்கும் ராஜா கிளி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தம்பி ராமையா விரைவில் அர்ஜுனனுக்கு சம்மந்தியாக போகிறார் என்று செந்தில் உளறியுள்ளார். தம்பி ராமையா மற்றும் செந்தில் ஆகிய இருவரும் சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் செந்தில், தம்பி ராமையா மகனுக்கு விரைவில் திருமணம் ஆகப் போகிறது.
ஆனால் பொண்ணு யார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. பரவாயில்லை நான் சொல்லி விடுகிறேன் நடிகர் அர்ஜுன் மகள் தான். வாழ்த்துக்கள் என்று கூறியதும் அருகில் இருந்த தம்பி ராமையா செந்திலின் காலைத் தொட்டு வழங்கினார். இவ்வாறு தம்பி ராமையாவிற்கு முன்பாகவே அவரது மகனின் திருமணத்தைப் பற்றி செந்தில் போட்டு உடைத்த நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க