VIDEOS
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, ஆனா ஒரு மகள் இருக்கா… மார்க் ஆண்டனி ட்ரைலர் வெளியீட்டு விழாவில் திடீரென மகளை மேடையில் ஏற்றி ஷாக் கொடுத்த விஷால்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவர் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தில் ரிது வர்மா மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. அந்த விழாவில் நடிகர் விஷால் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய நடிகர் விஷால், தன்னுடைய மகள் என்று கூறி கல்லூரி படிக்கும் மாணவி ஒருவரை மேடையில் அறிமுகப்படுத்தினார். அதனால் அனைவரும் சற்று அதிர்ந்து போனார். சில மாதங்களுக்கு முன்னர் எனக்கு ஒரு விண்ணப்பம் வந்தது அதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அவருக்கு சென்னையில் இருக்கும் ஸ்டெல்லா மேரிஸ் பிஏ ஆங்கிலம் படிக்க வேண்டும் என்றும் அது தான் அவரது நீண்ட நாள் கனவு எனவும் கூறி இருந்தார்.
அதனை கண்டதும் நான் உடனே கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசி, அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள் ஒரு செமஸ்டர் மட்டும் பாருங்கள் என் மகள் நல்லா படிப்பாங்க என்று கூறி கல்லூரியில் சேர்த்து விட்டேன். தற்போது வகுப்பில் இவர்தான் முதலாக இருக்கிறார் என்று கூறி விஷால் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.