LATEST NEWS
எனக்கு ஒத்த பைசா கூட வேணாம் நீங்களே வச்சுக்கோங்க.. சம்பளத்தை திருப்பிக் கொடுத்த விஜய் பட நடிகர்.. என்ன காரணம் தெரியுமா..??

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தான் சௌந்தரராஜா. இவர் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகராக உயர்ந்துள்ளார். இவர் சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, தர்மதுரை, பிகில் மற்றும் ஜகமே தந்திரம் உட்பட 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் விக்ரம் பிரபுவுடன் ரெய்டு திரைப்படத்தில் இவர் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
அதனைப் போலவே ஜிவி பிரகாஷ் உடன் இடிமுழக்கம் மற்றும் சாயாவனம் உள்ளிட்ட ஆறு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில் பிசியான நடிகராக நடித்து வருகின்றார். அதே சமயம் கட்டிங் கேங்ஸ் என்ற ஒரு மலையாள திரைப்படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான துடிக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நிலையில் இவரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த திரைப்படம் கொரோனா காலகட்டத்தில் தயாராகி தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளருக்கு உதவும் விதமாக தனக்கு வழங்கிய முழு சம்பளத்தையும் சவுந்தரராஜா அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டார். எந்த ஒரு நடிகரும் செய்யாத செயலை செய்துள்ள இவருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.