LATEST NEWS
மலையாள நடிகையை ரகசியமாக இரண்டாம் திருமணம் முடித்த நடிகர் சூரி?…. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடியில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரி என்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அதன் பிறகு சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து வருகிறார். இதுவரை பல்வேறு காமெடி படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் தற்போது வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக புதிய படத்தில் ஹீரோவாக நடித்த கமிட் ஆகியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் பூஜையில் இருவரும் மாலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளிவந்த நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்த இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்று கேள்வி கேட்க தொடங்கி விட்டனர். ஆனால் படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்று தெரியவந்துள்ளது.