வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள காரணம் என்ன?…. முதல்முறையாக மனம் திறந்த நடிகை பிரியங்கா சோப்ரா….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள காரணம் என்ன?…. முதல்முறையாக மனம் திறந்த நடிகை பிரியங்கா சோப்ரா….!!!!

Published

on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகையாகவும் வளம் வருபவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற இவர் தனது திரைபயணத்தை முதலில் நடிகர் விஜயுடன் தொடர்ந்தார். அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த என்ட்ரி கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் நடிக்கச் சென்றார்.

தனது நடிப்பு திறமையால் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். மற்ற நடிகைகளை போல இவரும் திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகினார். ஹோலிவுட் படங்களில் அதிக அளவு நடிக்க ஆரம்பித்தார். அதன் காரணமாக அமெரிக்காவில் குடியேறிய இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு பின்னர் முதல் குழந்தை பிறந்தது. அதுவும் வாடகை தாய் மூலமாக குழந்தையை பெற்றெடுத்துக் கொண்டனர்.

Advertisement

இந்நிலையில் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது முதன்முறையாக எதற்காக வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட காரணத்தை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். அதாவது தனக்கு மருத்துவர் ரீதியாக சில பிரச்சனைகள் இருப்பதாகவும் அதனால் தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் அவர் விளக்கம் அளித்து ஒரு பதிவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Priyanka இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@priyankachopra)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in