LATEST NEWS
நடிகர் தலைவாசல் விஜய்யின் மகளுக்கு…. பிரபல கிரிக்கெட் வீரருடன் நிச்சயதார்த்தம்…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்த நடிகர் தான் தலைவாசல் விஜய். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் முதல் முதலாக 1992 ஆம் ஆண்டு தலைவாசல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக 100% காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சன் டிவியில் அழகு என்ற சீரியலில் நடித்தார்.
இவ்வாறு பல புகழுக்குரிய இவரின் மகள் ஜெயவீனா ஒரு நீச்சல் வீராங்கனை. பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் இவருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித்திற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.