LATEST NEWS
தளபதி விஜயின் மகனா இது?… “அப்பாவை மிஞ்சிடுவார் போலையே”… இதுவரை பலரும் பார்க்காத படப்பிடிப்பு புகைப்படங்கள்… வைரல்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் மகன் சஞ்சய் தனது தந்தையை போலவே சினிமாவில் காலடி எடுத்து வைக்க தற்போது தயாராகி வருகின்றார்.
சமீபத்தில் கூட இவர் ஒரு குறும்படத்தை இயக்கி இருந்தார். இயக்குனராக முயற்சி செய்து வரும் சஞ்சய்க்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து விஜயின் மகன் சஞ்சயை தனது மகனுக்கு ஜோடியாக படத்தில் நடிக்க வைப்பதற்கு தேவையான என் கணவரும் பிரபல இயக்குனருமான ராஜகுமாரன் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தமிழகமே கொண்டாடும் நடிகர் விஜயின் மகன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
அவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏ ஆர் ரகுமானின் மகன் ஏ ஆர் அமீன் சஞ்சய் உடன் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் சஞ்சய் லண்டனில் தனது படிப்பை முடித்துவிட்டு தன்னுடைய நண்பர்களுடன் குறும்படங்களை இயக்கி வருகிறார்.
தற்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சஞ்சயின் சில புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.