LATEST NEWS
அதிரடியாக களமிறங்கும் விஜய்… புதிய நியூஸ் சேனல் தொடங்குகிறாரா?… வெளிவந்த தகவல்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க தயாராகி வருகின்றார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மக்கள் சேவையில் அதிக கவனம் செலுத்தி வரும் விஜய் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல பணிகளை மக்களுக்கு செய்து வருகின்றார். சமீபத்தில் சென்னை பனையூரில் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் யூடியூப் சேனல் மூலம் விஜய் மக்கள் இயக்க நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் சூழலில் நடிகர் விஜய் புதிதாக நியூஸ் சேனல் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள விஜய் தரப்பு தகவல் உண்மை இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.