CINEMA
முடிந்தால் தடுத்து பாருங்கள்…. தயாரிப்பார் சங்கத்திற்கு கெடு விதித்த விஷால்…. என்ன காரணம்..??

தென்னிந்திய திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் நடிகர் விஷால். இவர் தலைவராக இருந்த பொழுது தயாரிப்பாளர் சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்து விவகாரத்தில் இவருக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி இனி விஷாலை வைத்து பாடம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளது .
மேலும் முறைகேடாக சங்கத்திலிருந்து 12 கோடி செலவழித்த தொகை திரும்ப கொடுக்குமாறு பலமுறை கூறியும் விஷால் பதிலளிக்காததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விஷால் நடிக்கும் புதிய படங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் கெடு வைத்துள்ளார். தன் மீது குற்றம் சுமத்தி வெளியிடப்பட்ட அறிக்கை திரும்ப பெறுமாறு கேட்டுள்ளார் .அறிக்கை திரும்பப் பெறாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் .