CINEMA
அந்த விஷயத்தில் நானும் ஒருத்தி…. துரோகம் செஞ்சிட்டாங்க…. நடிகை சுனைனா உருக்கம்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகை தான் சுனைனா. சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.இவர் நகுல் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை.
இறுதியாக விஷால் நடிப்பில் வெளியான லத்தி திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். அடுத்ததாக ரெஜினா என்ற திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ராக்கெட் டிரைவர் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் படம் குறித்த பேட்டியில் பேசிய அவர், பெரியளவில் கடன் பிரச்சினை. ஏகப்பட்ட பிரச்சனைகளை வாழ்க்கையில சந்தித்துள்ளேன். துரோகம் நிறைய இருக்கு. இது எனக்கு மட்டும் தான் இருக்குன்னு சொல்ல மாட்டேன். பலரும் இந்த பிரச்சனையை கடந்து தான் வாழ்ந்துட்டு வர்ராங்க. அதில் நானும் ஒருத்தி