LATEST NEWS
நடிகர் பிரபுவை லவ் பண்றது அவங்க மனைவிக்கே தெரியும்.. அவருக்காக அப்படி இருக்க கூட ரெடி தான்.. பிரபல நடிகை ஓபன் டாக்..!!

பிரபல நடிகையான ஐஸ்வர்யா நடிகை லட்சுமி பாஸ்கரன் தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர். இவர் முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் சிவகுமார் நடிப்பில் வெளியான நியாயங்கள் ஜெயிக்கட்டும் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் என்ட்ரி கொடுத்தார். நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் ஐஸ்வர்யா நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு ஐஸ்வர்யா அளித்த பேட்டியில் கூறியதாவது, சூர்யா என்று சொல்ல மாட்டேன். சிறுவயதில் இருந்து இப்ப வரைக்கும் சரவணன் என்றுதான் அவரை அழைப்பேன். சரவணன் மற்றும் கார்த்தி உடன் தான் அதிகம் விளையாடி உள்ளேன்.
சிவக்குமார் சார் சினிமாவைப் பற்றிய பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார்.நான் 16 வயதில் இருந்தே பிரபுவை தான் காதலிக்கிறேன். இன்னுமும் அவர் எனக்கு டார்லிங் நான். இந்த விஷயம் பிரபுவின் மனைவி புனிதா அக்காவுக்கு தெரியும். கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான பாலைவன ரோஜாக்கள் படத்தில் பிரபுவின் நடிப்பை பார்த்து வியந்தேன். அவர் மீது எனக்கு அளவு கடந்த காதல் உள்ளது.
நான் சுயம்வரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணமே பிரபுவுடன் ஜோடியாக நடிக்கப் போகிறோம் என்பதால்தான். விஷால் நடித்த ஆம்பள படத்தில் நடிக்கும் போதும் பிரபுவை நல்லா சைட் அடித்தேன். அந்த காலத்தில் அவர் அப்படி ஒரு அழகாக இருப்பார். பிரபுவின் சின்ன வீடா கூட போக ரெடின்னு அவரிடம் சொல்லி இருக்கேன். அவரது நடிப்பை பார்த்தால் சினிமாவில் பல நடிகைகளுக்கும் ஒரு மாதிரி ஆகிவிடும் எனக் கூறியுள்ளார். ஐஸ்வர்யாவின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

#image_title