LATEST NEWS
போன வாரம் அமெரிக்கா, இந்த வாரம் ஆஸ்திரேலியா… ஊர் ஊராக சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வெளியான புகைப்படங்கள்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 8 வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.தற்போது கதைக்கு முக்கியத்துவம் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் சரியான முறையில் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான இந்த கிரேட் இந்தியன் கிச்சன், மற்றும் சொப்பன சுந்தரி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
அதே சமயம் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான தீரா காதல் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அடிக்கடி வெளிநாடு சென்று ஊர் சுற்றி வரும் புகைப்படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்து வருகிறார்.
அதன்படி கடந்த வாரம் அமெரிக்க சென்று இருந்த இவர் இந்த வாரம் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்க எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.