LATEST NEWS
தடகள போட்டியில் 2-ஆம் இடம் பிடித்த மகன்… உங்களுக்கு இவ்ளோ பெரிய மகனா?… மகனின் புகைப்படத்தை வெளியிட்டு பெருமிதம் கொண்ட சீரியல் நடிகை தீபா…

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவு பெற்ற தொடர்தான் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’. இந்த தொடர் இரு பாகங்களாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதில் நாம் இருவர் நமக்கு இருவர் 2வில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மத்தியிலும் பெரும் அளவில் பிரபலமானவர் நடிகை தீபா. அவர் பல பிரபல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அன்பே சிவம் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
அவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடிகை தீபா, சாய் கணேஷ் பாபு என்பவரை காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வந்தது.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை தீபா. இவர் தற்பொழுது தடகள போட்டியில் 2-ஆம் இடம் பிடித்ததை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.