LATEST NEWS
நயன்தாரா, தமன்னா, திரிஷா எல்லாரும் ஓரமா போங்க…! gorgeous லுக்கில் வீடியோ வெளியிட்ட நடிகை லைலா…!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துக் கலக்கியவர் நடிகை லைலா. இவர் ‘கள்ளழகர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இதைத் தொடர்ந்து காமராசு, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவருக்கு பிதாமகன், தில், நந்தா, தீனா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது.
விக்ரம், சூர்யா, அஜித், பிரபுதேவா போன்ற பிரபல தமிழ் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் லைலா. அதன் பின்னர் சரியான பல வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.இவர் 2006 இல் மேஹ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை லைலா. இவர் அவ்வப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களையும் , வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். தற்பொழுது இவர் gorgeous லுக்கில் தனது போட்டோஷூட் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்போதுள்ள முன்னணி நடிகைகளையே மிஞ்சிட்டாங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram