நடிகை மீனா, சங்கீதா என ஒன்று திரண்ட 90ஸ் நடிகை பிறந்தநாள்.. வைரலாகும் Birthday பார்ட்டி கிளிக்ஸ்.. - Cinefeeds
Connect with us

CINEMA

நடிகை மீனா, சங்கீதா என ஒன்று திரண்ட 90ஸ் நடிகை பிறந்தநாள்.. வைரலாகும் Birthday பார்ட்டி கிளிக்ஸ்..

Published

on

‘உல்லாசம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மகேஸ்வரி. இவர் நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் முதன் முதலாக சினிமா திரையுலகிற்கு 1994 ஆம் ஆண்டு ‘க்ரண்ட்டிவீர்’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பிறகு தான் தமிழில் ‘கருத்தம்மா’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்களிடையே அதிகமாகப் பிரபலமானார்.

அதற்கு பிறகு நடிகை மகேஸ்வரிக்கு சினிமா பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருநதன. மேலும்,நடிகை மகேஸ்வரி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ‘பாஞ்சாலங்குறிச்சி, நாம் இருவர் நமக்கு இருவர், உல்லாசம், நேசம், ரத்னா, என்னுயிர் நீதானே, சுயம்வரம் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து நடிகை மகேஷ்வரிக்கும் சினிமா துறையில் படவாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அவர் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் கால்பதித்தார். இவர் ‘அதே கண்கள்’ என்ற சீரியலில் நடித்துள்ளார்.

நடிகை மகேஸ்வரி  ‘ஃபேஷன் டிசைனிங்கில்’ மிகவும் ஆர்வம் உடையவர். இவர் சினிமாத்துறையில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் முழு கவனத்தையும் பேஷன் டிசைனில் செலுத்தி வந்தார். இதைத்தொடர்ந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மகேஸ்வரி. இவர் தற்பொழுது தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதில் நடிகை மீனா, சங்கீதா க்ரிஷ் உட்பட பிரபல நடிகைகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். தற்பொழுது இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.