கேரளத்து பைங்கிளி நடிகை நவ்யா நாயருக்கு திருமணமாகிடுச்சா?… அவருக்கு இவ்ளோ பெரிய மகனா?… - Cinefeeds
Connect with us

CINEMA

கேரளத்து பைங்கிளி நடிகை நவ்யா நாயருக்கு திருமணமாகிடுச்சா?… அவருக்கு இவ்ளோ பெரிய மகனா?…

Published

on

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நவ்யா நாயர். இவர் தமிழில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து ‘அழகிய தீயே’ திரைப்படத்தில் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமானார்.

மேலும் பல்வேறு மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழைக் காட்டிலும் தாய்மொழியான மலையாளத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து  அசத்தியுள்ளார். 2010 வரை சினிமாவில் பிஸியாக இருந்த அவர், இதை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை நவ்யா நாயர். இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் தனது மகனின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்ளோ பெரிய மகனா? என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.