LATEST NEWS
‘Miss you so much’… இரவு 1.30 மணிக்கு சமந்தாவிற்கு வீடியோ கால் செய்த விஜய் தேவர்கொண்டா… வெளியான ரொமான்டிக் வீடியோ…

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார். இதன் படபிடிப்பை முடித்த பிறகு சமந்தா தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் குஷி பட புரமோஷனிலும் பிசியாக உள்ளார் நடிகை சமந்தா.
அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி படத்தை சிவா நிர்வாணா இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி திரைக்கு வர உள்ளது. தற்பொழுது அவர் மயோசிட்டிஸ் நோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காதல் மற்றும் திருமணம் சார்ந்த விஷயங்களை மையப்படுத்தி தான் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. மற்றும் படத்தின் ரிலீஸிற்காக ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்டா சமந்தாவுடன்இரவு 1.30மணிக்கு வீடியோ காலில் பேசியுள்ளார். அத்தோடு சமந்தாவை மிஸ் பண்ணுவதாகவும் கூறியதோடு என்ரோஜா நீயே பாடலை சமந்தாவுக்காக பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram