CINEMA
இந்த கியூட் குழந்தை இன்று பிரபல நடிகை… யாருன்னு தெரியுதா உங்களுக்கு?…

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக இருப்பவர்தான் நடிகை பிரிகிடா. யூடியூபில் ஒளிபரப்பாகி வந்த வெப் சீரிஸ் ஆகா கல்யாணம் டிவி சீரியல்களை விட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தத் தொடரில் பவி டீச்சர் ஆக நடித்தவர் தான் பிரகிடா. பிரேமம் மலர் டீச்சருக்கு பிறகு அதிகமான ரசிகர்கள் இருப்பது பவி டீச்சருக்கு தான்.
இவர் மாஸ்டர் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே சமயம் முகின் ராவ் நடித்த வேலன் திரைப்படத்திலும் இவர் நடித்தார். பிறகு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் கதாநாயகி மற்றும் உதவி இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார். இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் பிரகிடா. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்பொழுது இவர் தனது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட சிறுவயது புகைப்படத்தை இணையாயத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…