மகளின் முதல் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடி அசத்திய கிரேசி கண்மணி தியா… வெளியான அழகிய புகைப்படங்கள்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

மகளின் முதல் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடி அசத்திய கிரேசி கண்மணி தியா… வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

சன் மியூசிக் இல் தொகுப்பாளினியாக களம் இறங்கி அதன் பிறகு சீரியலில் நுழைந்தவர் தான் நடிகை தியா மேனன். கேரளாவில் பிறந்த இவர் பள்ளிப்படிப்பை கேரளாவில் தான் முடித்தார்.

அதன் பிறகு கல்லூரி படிப்புக்காக தமிழகம் வந்த இவர் கோயம்புத்தூரில் கல்லூரி படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு மீடியாவுக்குள் நுழைந்த இவர் முதலில் சன் மியூசிக் தொகுப்பாளினியாக களமிறங்கினார்.

அங்கு பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதிலும் குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய கிரேசி கண்மணி என்ற நிகழ்ச்சி அவருக்கு ஒரு அடையாளத்தை தேடி தந்தது என கூறலாம்.

ரசிகர்கள் மத்தியிலும் கிரேசி கண்மணியாக திகழ்ந்த தியா மேனன் சன் டிவியில் வணக்கம் தமிழா, சவாலே சமாளி மற்றும் சூப்பர் சேலஞ்ச் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இப்படி பிசியான தொகுப்பாலினியாக இருந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பிரமணியம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவரின் கணவர் சிங்கப்பூர் சிட்டிசன் என்பது மட்டுமல்லாமல் அங்கு மாநில அளவிலான கிரிக்கெட் வீரராகவும் இருந்துள்ளார்.

மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு தியா சிங்கப்பூருக்கு குடியேறிய நிலையில் தற்போது அங்கு குடியுரிமையும் பெற்றுவிட்டார்.

இந்நிலையில் தியா மேனன் மற்றும் கார்த்திக் தம்பதியினருக்கு பல வருடங்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த வருடம் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

கிட்டத்தட்ட திருமணமாகி ஆறு வருடங்களுக்கு பிறந்த முதல் பெண் குழந்தைக்கு கியாரா என்று பெயர் வைத்துள்ளனர்.

சிங்கப்பூரில் குடியேறினாலும் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்யா மேனன் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது தனது செல்ல மகளின் முதலாம் ஆண்டு பிறந்த நாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

அதை தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.