LATEST NEWS
‘திருமணத்திற்கு NO… ஆனால் அந்த ஆசை மட்டும் இருக்கு’… மனம் திறந்து பேட்டியளித்த நடிகை நக்மா…

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி புயலாக 90களில் ஒரு காட்டு காட்டியவர் தான் நக்மா. வடக்கிலிருந்து தமிழ் சினிமாவில் தஞ்சமடைந்த நடிகைகளில் இவரும் ஒருவர். அன்றைய காலத்தில் நக்மாவை பார்த்து ஏங்காத ரசிகர்களே கிடையாது. இவர் ரஜினி, கமல், கார்த்திக் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இவருடைய உண்மையான பெயர் நந்திதா மொராஜி. திரை துறைக்காக நக்மா என்று மாற்றிக் கொண்டார். இவர் ஆரம்பத்தில் தன்னுடைய நடிப்பு பயணத்தை பாலிவுட்டில் தான் தொடங்கியிருந்தார். பின் சில படங்கள் ஹிந்தியில் நடித்துவிட்டு தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் நக்மா.
2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் ‘காவலன்’. இத்திரைப்படத்தின் மூலம் தான் நக்மா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக், பிரபுதேவா,ரஜினி,நெப்போலியன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார்.
மேலும், தென்னிந்திய படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் நக்மா இங்கேயே அதிக கவனம் செலுத்த தொடங்கி இருந்தார். அதிலும் பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனதும் நக்மா உடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
அதன் பின் நக்மாவின் மார்க்கெட் எகிறியது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவர் திரையுலகை விட்டு விலகினார்.
இவர் தற்பொழுது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 48 வயதான நக்மா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுகுறித்து அவர் அளித்த சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘எனக்கு திருமணம் செய்யவேக்கூடாது என்ற எண்ணமெல்லாம் இல்லை. சொல்லப்போனால் திருமணம் செய்து குடும்பம், குழந்தைகள் என வாழ்வதற்கு ஆசை இருக்கிறது. அப்படி ஏதும் நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று கூறியுள்ளார்.