LATEST NEWS
கபாலிஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை செய்து… பிறந்த நாளை கொண்டாடிய நடிகை நமீதா…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து தனது கவர்ச்சியால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசம் கவர்ந்தவர் தான் நடிகை நமீதா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.
இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் இன்றும் ரசிகர் மத்தியில் இவருக்கென தனி ஒரு வரவேற்பு உள்ளது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்போது அரசியலில் களம் இறங்கி அசத்தி வருகின்றார்.
இவருக்கு கடந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான்ராஜ் என்று தனது குழந்தைகளுக்கு நமீதா பெயர் சூட்டியுள்ளார்.
சமீபத்தில் நமீதா தனது கர்ப்பத்தை ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக வயிற்றின் மேல் கை வைத்தவாறு ஒரு அச்சை எடுத்து அதில் வர்ணம் பூசி சிலை போல் தன்னுடைய வீட்டில் செய்து வைத்துள்ள வீடியோவை வெளியிட்டார்.
இந்நிலையில் அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலிஸ்வரர் திருக்கோவிலில் 1008 தாமரை மலர்களை வைத்து சிறப்பு பூஜை நடத்தினார்.
அதன் பின்னர் திருக்கோயிலில் இலவசமாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். நமீதா தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
