LATEST NEWS
இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய கயல் ஆனந்தி…. வெளியான அழகிய ஜோடியின் புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமான அனைத்து நடிகைகளுமே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிப்பது சிரமம் தான். ஆனால் ஒரு சில நடிகைகள் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.
அதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஆனந்தி.
அந்தத் திரைப்படத்தில் இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதனை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்தத் திரைப்படத்தில் பாவாடை சட்டை அணிந்து ஒரு கிராமத்து பெண்ணாக தனது எதார்த்தமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தினார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளை பெற்றது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடித்த ஆனந்திக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.
இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படத்தில் நடித்து முடித்ததற்கு பிறகு இவர் கயல் ஆனந்தி என்றுதான் அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
இதனை தொடர்ந்து வெற்றிமாறனின் விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதேசமயம் ஜிவி பிரகாஷ் உடன் த்ரிஷா இல்லனா நயன்தாரா, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, சண்டிவீரன் மற்றும் மன்னார் வகையறா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இப்படி திரையுலகில் பிஸியான நடிகையாக வளம் வந்த இவர் திடீரென தன்னுடைய காதலருடன் திருமண தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
இவர் துணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்ததற்கு பிறகு எந்த இடத்திலும் குழந்தைக்கு தாயான விஷயத்தை பேசாத ஆனந்தி சமீபத்தில் ஜாதி இல்லா சான்றிதழ் தனது குழந்தைக்கு வாங்கியுள்ளதாக கூறிய அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும் கதாநாயகியாக நடித்து வரும் கயல் ஆனந்தி இதுவரை தனது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளவில்லை. இந்நிலையில் கயல் ஆனந்தி தன்னுடைய இரண்டாம் ஆண்டு திருமண நாளை கணவருடன் கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
