LATEST NEWS
சமந்தாவை போலவே நடிகை நந்திதாவுக்கு இப்படி ஒரு நோயா?.. உடலை கூட அசைக்க முடியலையாம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகை தான் நந்திதா. இவர் முதன்முதலாக அட்டகத்தி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் குமுதா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் குடும்பப் பாங்கான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் ஜொலித்து வருகிறார்.
அதன் பிறகு தமிழில் வாய்ப்பு குறைந்ததால் தெலுங்கு மொழியிலும் நடித்து வந்தார். இதனிடையே சமீப காலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியுள்ள நந்திதா இணையத்தில் ரசிகர்களை மயக்கும்படியான கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நந்திதா அளித்த பேட்டியில், தான் கடந்த சில வருடங்களாக fibromyalgia என்ற நோயால் பாதிக்கப்பட்ட இருப்பதாகவும் இந்த நோயால் உடல் எடை அதிகம் மாறுபட்டு வந்தது என்றும் சின்ன வேலை செய்தால் கூட உடலில் அதிக வலி இருக்கும்.
சில நாட்களில் உடலை அசைப்பதே மிகவும் கஷ்டமாக இருக்கும் நிலை வந்தது என்று கூறியுள்ளார். சமீபத்தில் சமந்தா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரைத் தொடர்ந்து நந்திதாவும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.