வெளிநாட்டில் படிச்சாலும் அப்படியே தமிழ் பொண்ணு மாதிரியே இருக்காங்களே… நடிகர் பார்த்திபன் மகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெளிநாட்டில் படிச்சாலும் அப்படியே தமிழ் பொண்ணு மாதிரியே இருக்காங்களே… நடிகர் பார்த்திபன் மகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்திபன். முதல் படத்திலேயே பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை 2001 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன் பிறகு சீதா, ரமேஷ் என்ற சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பார்த்திபன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்காக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதனிடையே சமீபத்தில் பார்த்திபன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில் பார்த்திபன் அளித்த பேட்டியில், எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தன்னுடைய மகன் இயக்குனராக பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் தனது மகள் மருமகனும் இயக்குனராகவே ஆசைப்படுகிறார்கள். எனது மகள் கீர்த்தனா முதல் பொக்கிஷம் எனவும் அவருக்கு இசை மீது அதிக ஆர்வம் உண்டு எனவும் கூறினார். இது நாள் வரை என்னுடைய வாழ்க்கையில் மீண்டும் சினிமாவில் நுழைவதற்கு தன்னுடைய மகள் கீர்த்தனா மட்டுமே முழு காரணம்.

 

Advertisement

தனது மூத்த மகள் உயிர் என்றும் கீர்த்தனா எனது அறிவு என்றும், மகன் அன்பு என்றும் தெரிவித்ததோடு பிள்ளைகளை இவ்வாறு தான் பிரித்து வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். பார்த்திபனின் இளைய மகள் கீர்த்தனா வெளிநாடு சென்று படித்து வந்தாலும் தமிழ் கலாச்சார மாறாமல் புடவையில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in