LATEST NEWS
டாக்டர் பட்டம் பெற்ற கே.எஸ் ரவிக்குமார் மகள் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?… கணவருடன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். கமர்சியல் கிங் என்றால் அனைவர் நினைவுக்கும் வருவது கே எஸ் ரவிக்குமார் தான். இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய நாட்டாமை,முத்து, நட்புக்காக, படையப்பா, சூரியவம்சம், வரலாறு மற்றும் தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் நடிகராகவும் கலக்கியுள்ளார். இந்நிலையில் கே எஸ் ரவிக்குமார் கற்பகம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஐஸ்வந்தி மற்றும் மோனிஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
அதில் மோனிஷா தற்போது சென்னையில் புதிதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்து உள்ளார். மேலும் படிப்பை முடித்துவிட்டு டாக்டர் அரவிந்த் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டு குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் தனது கணவருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
