இதுவரை கமலுடன் ஒரு படம் கூட நடிக்காத நதியா… முதல்முறையாக கூறிய காரணம்… இனிமே நடிக்க வாய்ப்பு இருக்கா…?? - cinefeeds
Connect with us

LATEST NEWS

இதுவரை கமலுடன் ஒரு படம் கூட நடிக்காத நதியா… முதல்முறையாக கூறிய காரணம்… இனிமே நடிக்க வாய்ப்பு இருக்கா…??

Published

on

தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு முன் அறிமுகமானவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களும் உள்ளனர். ஒரு காலகட்டத்தில் நதியா கொண்டை, நதியா வளையல் மற்றும் நதியா கம்மல் என அவர் பெயரில் வியாபாரமும் செழிப்பாக இருந்தது. பொதுவாக நடிகைகள் சிலர் இரண்டாவது திரைப்படத்தில் கவர்ச்சியில் குதிப்பார்கள்.

ஆனால் தனது இறுதி படம் வரை கவர்ச்சி காட்டாமல் கண்ணியமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது நதியா மட்டும் தான். இவருக்கு தற்போது 55 வயதாகிறது. ஆனாலும் தனது இளமை குறையாமல் இன்னும் அப்போது இருந்தது போல இளமையாகவே இருக்கிறார்.  இந்நிலையில் 90களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜயகாந்த் மற்றும் மோகன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்த நதியா கமலுடன் மட்டும் ஒரு திரைப்படம் கூட நடிக்கவே இல்லை.

Advertisement

அவர் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்த போதிலும் அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் நதியா அளித்த பேட்டியில், கமல் படத்தில் ஏன் இதுவரை நடிக்கவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,கமலுடன் இதுவரை ஒரு திரைப்படத்தில் கூட நடிக்காதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. கமலுடன் நடிக்காமல் போனதற்கு கால்ஷூட் பிரச்சனை தான் முக்கிய காரணம்.

அவர் படத்தில் நடிப்பதற்கு என்னை அணுகும் போதெல்லாம் நான் வேறொரு படத்தில் கமிட் ஆகி இருந்தேன். விக்ரம் படத்தில் முதல் பாகத்தில் நடிக்க வேண்டியது நான்தான். ஆனால் அப்போது நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி இருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை. கமல் சார் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார், நானும் இன்னமும் நடிக்கிறேன், வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in