LATEST NEWS
10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் நடிகை பிரியாமணி…. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?…. சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது வாங்கினார். பிரியாமணி என்கின்ற ப்ரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி என பல புகழுக்குரியவர். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவருக்கு பட வாய்ப்புகள் திடீரென குறைந்த நிலையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னட மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாகவும் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்தும் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள DR 56 என்ற திரைப்படத்தில் பிரவீன் ரெட்டி நாயகனாக நடிக்க பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் அப்போது பேசிய பிரியாமணி, சாருலதா திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நான் நடித்து வெளிவரும் படம் dR 56 என்பதால் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் 10 வருடங்களுக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் இனி தொடர்ந்து தமிழில் நடிப்பேன் என பிரியாமணி கூறியுள்ளார்.